உத்தரபிரதேச மாநிலம் சம்பல் பகுதியில் வன்முறையால் பாதிக்கப்பட்ட மக்களை மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல்காந்தி இன்று சந்திக்க உள்ளதாக கூறப்படுகிறது. வன்முறைக்கு பிறகு 24 மணி நேரமும் காவல்துறை கட்டுபாட்டுடன் வெளி ஆட்கள் நுழைய தடை உள்ள நிலையில், ராகுல் காந்தி மற்றும் பிரியங்கா காந்தி இருவரும் சம்பல் பகுதிக்கு செல்கின்றனர்.