சினிமாவை விட்டுடுறேன்- ’புஷ்பா 2’ இயக்குநர் பகீர்சுகுமார் இயக்கத்துல, அல்லு அர்ஜுன் நடித்து வெளியான ’புஷ்பா 2’ திரைப்படம் வசூலில் சக்கைபோடு போட்டு வருது. என்னதான் ஒருப்பக்கம் படம் பார்க்கவந்த பெண்ணின் மரணம், அந்த பெண்ணோட மகன் மூளைச்சாவு அடைஞ்சதுன்னு படக்குழுவுக்கு நெருக்கடி அதிகரிச்சிட்டே போனாலும் மக்கள் ஆர்வம் குறையாம இந்த படத்த பார்த்துட்டு தான் இருக்காங்க.. இந்த நிலையில இயக்குநர் சுகுமார் ’கேம் சேஞ்சர்’ படம் தொடர்பான ஒரு நிகழ்ச்சியில தொகுப்பாளர் கேட்ட கேள்விக்கு அளித்துள்ள பதில் சினிமா பிரபலங்கள் உள்ளிட்ட பலருக்கும் அதிர்ச்சிய ஏற்படுத்தியிருக்கு..நிகழ்ச்சியில அவர நோக்கி “எந்த ஒரு விஷயத்த நீங்க விட்டுடணும்னு நெனைக்கிறீங்க?”-ன்னு தொகுப்பாளர் கேட்கவே, கொஞ்சமும் யோசிக்காம “சினிமாவ தான்”னு அவர் பதில் சொல்லியிருக்காரு.. இதனால மொத்த கூட்டமும் ஷாக் ஆகவே, பக்கத்துல இருந்த ராம் சரண் அதெல்லாம் இல்லங்குற பாணியில தலையாட்டிட்டு, மைக்க உடனே அவர்கிட்ட இருந்து வாங்கி, “எல்லாரும் பயந்துட்டீங்களா.. அவர் சும்மா சொல்றாரு.. அப்படிலாம் பண்ண மாட்டாரு”ன்னு சொல்றாரு.. என்ன இருந்தாலும் இண்டஸ்ட்ரீ ஹிட் படங்கள கொடுத்த இயக்குநர் ஏன் இப்படி சொல்றாருன்னு ரசிகர்கள் சற்றே குழப்பத்துல தான் இருக்காங்க.. இன்னும் சிலர், ஒருவேளை புஷ்பா 2 கொடுத்த அனுபவமோன்னு சமீபத்துல நடந்த சர்ச்சைகளையும் தொடர்புபடுத்தி கருத்திட்டு வர்றாங்க.. பேபி ஜான் படத்தின் முதல் நாள் வசூல்தமிழ்ல அட்லீ இயக்கத்தில் வெளியான தெறி படத்தின் இந்தி ரீமேக்கா உருவான ’பேபி ஜான்’ திரைப்படம் வருண் தவான், கீர்த்தி சுரேஷ் உள்ளிட்டோர் நடிச்சு கிறிஸ்துமஸ் தினத்துல வெளியாச்சு. அட்லீயின் உதவி இயக்குநரான காலிஸ் இந்த படத்தை இயக்கியுள்ள நிலையில, இயக்குநர் அட்லீ இந்த படத்த தயாரிச்சிருக்காரு..தமிழ்ல விஜயின் அதிரடி நடிப்புல ஆக் ஷன் கதையம்சத்தோட வெளியாகி நல்ல வரவேற்ப பெற்ற தெறி படத்தை போலவே பேபி ஜான் படத்திற்கும் இந்தி ஆடியன்ஸ் உள்ளிட்ட சினிமா ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு கெடச்சிருக்கு. அந்த வகையில பேபி ஜான் படத்தின் முதல் நாள் வசூல் குறித்த தகவல் வெளியாகியிருக்கு. அதன்படி பேபி ஜான் இந்தியா முழுக்க ரூ.12.5 கோடிக்கும் அதிகமான வசூலை குவித்துள்ளதா கூறப்படுது. அல்லு அர்ஜூனின் ’புஷ்பா 2’ திரைப்படம் 21 நாட்களா திரையரங்குகள்ல வெற்றி நடைபோடும் நிலையில, அதன் கிறிஸ்துமஸ் நாள் வசூலான ரூ.19.75 கோடியை விட இது குறைவு என்பது குறிப்பிடத்தக்கது. வாடிவாசல் படத்தின் முக்கிய அப்டேட்வெற்றிமாறன் இயக்கத்துல கடந்த ஆண்டு வெளியான விடுதலை படத்தின் தொடர்ச்சியா ’விடுதலை 2’ திரைப்படம் விஜய் சேதுபதி, மஞ்சுவாரியர், சூரி, தமிழ் உள்ளிட்டோர் நடித்து சமீபத்துல வெளியாச்சு. மக்களுக்கு எதிரான ஆளும் வர்க்கத்தின் அரசியலை சமரசமில்லாம துணிச்சலோட பேசியிருக்கும் இந்தப்படம் நேர்மறை விமர்சனங்கள பெற்று திரையரங்குகள்ல வெற்றி நடை போட்டுவருது. இந்த நிலையில வெற்றிமாறனின் அடுத்த படமான வாடிவாசல் குறித்த அப்டேட் வெளியாகியிருக்கு..வாடிவாசல் படத்துல சூர்யா நடிக்க இருப்பதா ஏற்கனவே அறிவிக்கப்பட்ட நிலையில, படத்தின் படப்பிடிப்பு பணிகள் இன்னும் தொடங்கப்படாம இருக்கு. இந்நிலையில விடுதலை படத்தின் 2 பாகங்கள்லயும் முக்கிய கதாபாத்திரத்துல நடிச்ச இயக்குநர் தமிழ் வாடிவாசல் படத்துலயும் இணைந்துள்ளதா தகவல் வெளியாகியிருக்கு. ’விடுதலை 2’ தற்சமயம் வெளியாகிவிட்ட நிலையில, சீக்கிரமே ’வாடிவாசல்’ படத்தின் படப்பிடிப்பு தொடங்கும்னு எதிர்பார்க்கப்படுது. மேலும் ரெட்ரோ, சூர்யா 45 படங்கள்ல நடிகர் சூர்யா கவனம் செலுத்திவரும் நிலையில இந்த படங்கள முடிச்சிட்டு வாடிவாசல் படப்பிடிப்புல அவர் இணைவார்னு சொல்லப்படுது. என்னை எல்லாரும் Arrogant-னு சொல்றாங்கதமிழின் மிக வித்தியாசமான இயக்குநர்கள்ல ஒருவரா பார்க்கப்படுபவர் மிஷ்கின். சமீப நாட்களா பல படங்களின் புரொமோஷன் நிகழ்சிகள்ள கலந்துகிட்டு பேசிவர்ற அவர் சில நேரங்கள்ல ஏதாச்சும் சர்ச்சையா பேசி விமர்சனங்கள்ல சிக்குவாரு. இந்த நிலையில, சென்னையில மேக்ஸ் படத்தோட டிரைலர் வெளியீட்டு விழாவுல கலந்துகிட்ட இயக்குநர் மிஷ்கின் தன்மீது வைக்கப்படுற விமர்சனம் தொடர்பா வெளிப்படையா பேசியிருக்காரு..இந்த நிகழ்ச்சியில இது தொடர்பா பேசுன அவரு, “என்னை எல்லாரும் Arrogant-ஆன டைரக்டர்னு சொல்றாங்க. அது உண்மைதான்”னு சொல்லியிருக்காரு.. தொடர்ந்து பேசுன அவர், ”வியாபாரம், தொழில்நுட்பம், கலைத்தன்மைனு ஒரு படத்தை 3 விதமாக பார்க்கலாம்னும், குறைந்த பட்ச லாபமாவது நாம தயாரிப்பாளருக்கு உருவாக்கி கொடுக்கனும்”னு புதிய டைரக்டர்களுக்கு அட்வைஸ் பண்ணியிருக்காரு.உயரம் குறைவா இருந்ததால வருத்தப்பட்டேன்பாலிவுட் நடிகர்கள்ல ஏகப்பட்ட ரசிகர்கள கொண்ட முக்கிய நடிகரா இருப்பவர் அமீர்கான். இவரை மாதிரி மாப்பிள்ளை வேணும்னு பெண்கள் விரும்பும் அளவுக்கு Most Stylish-ஆன நடிகரா இருக்கும் அமீர்கானே தன்னுடைய உருவம் தொடர்பா தனக்கு தாழ்வு மனப்பான்மை இருந்ததா வெளிப்படையா பேசியிருக்காரு.. சமீபத்தில் ஒரு யூடியூப் கலந்துரையாடலில் நடிகர் நானா படேகருடன் கலந்துகொண்ட அமீர்கான், ”பாலிவுட்டுக்கு வந்த புதுசுல நான் உயரம் குறைவா இருந்ததால என்ன ரசிகர்கள் ஏத்துக்குவாங்களானு எனக்கு சந்தேகமா இருந்துச்சு. ஒருவேளை மக்கள் ஏத்துக்கலனா என்ன பண்றதுங்க்குற பயம் எனக்கு இருந்துச்சு. ஆனால் இது ஒரு பிரச்சினை இல்லங்கறத அப்றம்தான் நான் புரிஞ்சுக்கிட்டேன்”னு சொல்லி இருக்காரு. இதுக்கு நானா படேகர், ”என் முகத்தை பாரு.. நானெல்லாம் 50 வருஷமா நடிச்சுகிட்டு இருக்கேன்”னு சொல்ல, தொடர்ந்து பேசுன அமீர்கான், “நாம எந்த அளவுக்கு நேர்மையா வேலை செய்யுறோம் என்பதும் நம்ம நடிப்பு மத்தவங்கள எந்த அளவுக்கு ஈர்க்குது என்பதும்தான் முக்கியம். மத்ததெல்லாம் முக்கியம் இல்ல”னு சொல்லி இருக்காரு. ஒரு வழியா டப்பிங்கை முடிச்சிட்டாங்கதுணிவு படத்துக்கு அப்றம் அஜித் நடிக்கும் படம் விடா முயற்சி. தடையற தாக்க, தடம், கலகத் தலைவன்னு தரமான படங்கள கொடுத்த மகிழ் திருமேனி இயக்குற இந்த படத்துல அஜித்துடன் இணைந்து அர்ஜூன், ஆரவ் , திரிஷா உள்ளிட்ட நடிகர்களும் நடிச்சிருக்காங்க. ரொம்ப காலமா எடுக்கப்பட்டு வரும் இந்த படத்தோட டீசர் சமீபத்துல வெளியாகி ரசிகர்களுக்கு விருந்தா இருந்துச்சு.இந்த நிலையில, விடாமுயற்சி படத்தின் முக்கிய அப்டேட் தற்சமயம் வெளியாகியிருக்கு. அதன்படி விடாமுயற்சி படத்தின் டப்பிங் வேலைகள் நிறைவடஞ்சு இருக்குறதா படக்குழு அறிவிச்சு இருக்கு. அதுமட்டுமில்லாம இந்த படத்தோட முதல் சிங்கிளான Sawadeeka என்ற பாடல் நாளை வெளியாக இருக்கிறதாவும் அறிவிச்சு இருக்காங்க. இறுதிக்கட்ட பணிகள்ல இருக்கும் இந்தப்படம் பொங்கல் வெளியீடா திரையரங்குகள்ல ரிலீஸாக இருப்பது குறிப்பிடத்தக்கது.https://www.youtube.com/embed/hAAeim1cSKs