துரை செந்தில்குமார் இயக்கும் புதிய படத்தின் படப்பிடிப்பு தொடர்பான காட்சிகளை ‘லெஜண்ட்’ சரவணா எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ளார். இந்த படத்திற்கான படப்பிடிப்பு சென்னை, தூத்துக்குடி மற்றும் வட மாநிலங்களிலும் நடைபெற்றது. அதனை தொடர்ந்து தற்போது ஜார்ஜியா நாட்டில் படப்பிடிப்பு நடைபெறுகிறது. இந்த படப்பிடிப்பு தொடர்பான காட்சிகளை, படத்தின் ஹீரோ 'லெஜண்ட்' சரவணா சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ளார்.