சிந்தனை, சொல், செயல் என அனைத்திலும் புதுமையை நோக்கி விரைந்து தமிழ்ச் சமூகத்துக்குப் புதுநெறி காட்டிய புலவன் பாரதியின் பெருமையை எட்டுத்திக்கும் கொண்டு சேர்ப்போம் என்று, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நெகிழ்ச்சியாக பதிவிட்டுள்ளார். இதுதொடர்பாக, அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், பெண்களின் உயர்கல்வியை உறுதிசெய்யும் திட்டத்துக்குப் பாரதியின் கவிதையில் இருந்தே புதுமைப்பெண் எனப் பெயரிட்டதாகவும், திமுக ஆட்சியிலேயே பாரதியாரின் நினைவு நாளினை "மகாகவி நாள்" எனக் கடைப்பிடிக்கவும் அறிவித்ததாகவும் தெரிவித்தார்.