ராணிப்பேட்டை மாவட்டம், காஞ்சனகிரி மலையில் கஞ்சன் என்ற அரக்கனுக்கு சிவபெருமான் திதி கொடுக்கும் நிகழ்வு விழாவாக நடைபெற்றது. சிவபெருமானிடம் கஞ்சன் கேட்டுக்கொண்டதன் அடிப்படையில், அவரே திதி கொடுக்கும் நிகழ்வு விழாவாக கடைபிடிக்கப்படுகிறது. இதையொட்டி கோயிலில் பல பூஜைகள் நடத்தப்பட்டன. பக்தர்கள் திரளாக பங்கேற்று வழிபாடு செய்தனர்.