விக்னேஷ் சிவன் இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன் நடித்துள்ள 'லவ் இன்சூரன்ஸ் கம்பெனி' திரைப்படம் மே 16-ம் தேதி வெளியாகும் என தகவல் வெளியாகியுள்ளது. கதாநாயகியாக கீர்த்தி ஷெட்டி நடித்துள்ள நிலையில், எஸ்.ஜே சூர்யா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். சீமான், பிரதீப் ரங்கநாதனுக்கு தந்தையாக நடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.