உத்தரபிரதேச மாநிலத்தில் கங்கை, யமுனை மற்றும் சரஸ்வதி ஆகிய 3 புனித நதிகள் சங்கமிக்கும் இடமான ”திரிவேணி சங்கமத்தில்” நேற்று ஒருநாளில் ஒன்றரை கோடி பக்தர்கள் புனித நீராடியதாக அம்மாநில முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் தெரிவித்துள்ளார். 144 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடக்கும் மகா கும்பமேளா நிகழ்ச்சி பிரயாக்ராஜில் நேற்று கோலாகலமாக தொடங்கியது.