இலங்கை முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்சேயின் மகன் யோஷித ராஜபக்சேவை சட்டவிரோத சொத்து குவிப்பு வழக்கில் குற்றப்புலனாய்வு போலீசார் கைது செய்தனர். கடந்த 2024ல் நடந்த பொதுத்தேர்தலில் தேர்தலில் போட்டியிட்ட ராஜபக்சவின் மூத்த மகன் நமல் ராஜபக்ச, ஊழல் குற்றச்சாட்டுகளால் தோற்கடிக்கப்பட்டார். இந்நிலையில் அவரது இளைய மகன் யோஷித ராஜபக்சே சொத்து குவிப்பு வழக்கில் கைது செய்யப்பட்டிருக்கிறார்.