மஹிந்திரா நிறுவனம் இந்தியாவில் தாங்கள் விற்பனை செய்து வரும் தார் மாடலுக்கு 3 லட்ச ரூபாய் வரையிலான சலுகைகளை வழங்கியிருக்கிறது. டிசம்பர் மாத சலுகையாக தாரின் 4 வீல் டிரைவ் மாடல்களுக்கு ஒரு லட்சத்து ஆறாயிரம் ரூபாயும், பெட்ரோல் இன்ஜின் மற்றும் 2 வீல் டிரைவ் வசதி கொண்ட தார் மாடலுக்கு ஒரு லட்சத்து 31 ஆயிரம் ரூபாயும் தள்ளுபடி அறிவிக்கப்பட்டுள்ளது.