குறைந்தது ஆறு மாதங்களாவது என்னை முதலமைச்சராக்குங்கள் என அமித்ஷாவிடம் ஏக்நாத் ஷிண்டே கோரிக்கை விடுத்ததாக தகவல் வெளியாகி உள்ளது. மகாராஷ்டிராவில் மகாயுதி கூட்டணி அமோக வெற்றியை பெற்று ஆட்சியை தக்க வைத்த நிலையில், புதிய அரசை அமைப்பதில் சிக்கல் நீடிக்கிறது. இதனிடையே முதல் ஆறு மாதங்களுக்கு தன்னையே முதலமைச்சராக்க வேண்டும் என ஷிண்டே அமித்ஷாவிடம் வலியுறுத்தியதாக கூறப்படுகிறது