நாடாளுமன்ற தேர்தல் சமயத்தில் மிகவும் சர்ச்சைக்குள்ளான சந்தேஷ்காளிக்கு மேற்குவங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி இன்று செல்கிறார். ரேஷன் பொருட்கள் கடத்தல், நில அபகரிப்பு, பாலியல் வன்கொடுமை என பல்வேறு குற்றச் செயல்களில் ஈடுபட்ட திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் நிர்வாகி ஷேக் ஷாஜகானின் அராஜகத்தை கண்டித்து, சந்தேஷ்காளி மக்கள் போராட்டத்தில் குதித்ததால் பதற்றம் ஏற்பட்டது.