பாலியல் பலாத்காரத்திற்கு பலியானவர்கள், ஆசிட் வீச்சுக்கு ஆளானவர்கள் அனைவருக்கும் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் இலவச மருத்துவ சிகிச்சை வழங்க வேண்டும் என டெல்லி உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இவர்களுக்கு உடனடியாக தேவையான மருத்துவ சேவைகள் கிடைப்பதை மத்திய மாநில அரசுகள் உறுதி செய்ய வேண்டும் என நீதிபதிகள் பிரதிபா சிங் மற்றும் அமித் சர்மா அமர்வு உத்தரவிட்டது. முதலுதவி, நோய் கண்டறிதல், உள்நோயாளி- வெளிநோயாளி சிகிச்சை, மருத்துவ ஆய்வக உதவிகள், அறுவை சிகிச்சை, மனநல ஆலோசனை, உளவியல் ரீதியான ஆதரவு, குடும்ப ஆலோசனை உள்ளிட்டவை இந்த சேவையில் அடங்கும் எனவும் நீதிபதிகள் தெரிவித்தனர்.