எதிர்பார்த்த அளவுக்கு திறன் இல்லாத பணியாளர்களை பணி நீக்கம் செய்ய மெட்டா தலைமை நிர்வாக அதிகாரி மார்க் ஜுக்கர்பெர்க் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால் சுமார் 3 ஆயிரத்து 600 பணியாளர்கள் வேலை இழக்கும் அபாயத்தில் உள்ளதாகவும் கூறப்படுகிறது. மெட்டா நிறுவனத்தில் மொத்தம் உள்ள 72 ஆயிரம் பணியாளர்களில் இது 5 சதவீதம் என்றும் கூறப்படுகிறது