திருச்சி மாவட்டம், மணப்பாறை அருகே உள்ள அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் 3 ம் ஆண்டு விழா நடைபெற்றது. இந்நிகழ்வில் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி மற்றும் கோவி. செழியன் ஆகியோர் கலந்து கொண்டுள்ளனர். அப்போது கல்லூரியின் முதல்வர் முதுகலை கல்வி பயில நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்ற கோரிக்கையை முன் வைத்துள்ளார். இதனையடுத்து பேசிய உயர்க்கல்வித்துறை அமைச்சர் கோவிச்செழியன் , இளங்கலை முடித்து விட்டு பிள்ளைகளுக்கு திருமணம் செய்து வைத்து விடுவோம் என்று பெற்றோர்கள் மிரட்டுகிறார்கள். அவர்களுக்கு கல்யாணமா? முதுகலை கல்வியா? என்று இரண்டு அமைச்சர்களும் முடிவெடுங்கள் என எங்கள் மீது வீசி இருக்கிறார் கல்லூரி முதல்வர். மேலும் இரண்டு அமைச்சர்களை அமர வைத்து கல்லூரி முதல்வர் வைத்த கோரிக்கை தான் மாட்டிக்கொண்டீர்களடா மந்திரிகளா என்பதைப்போல உள்ளது என காமெடியாகப் பேசியது மாணவர்களிடையே சிரிப்பலையை ஏற்படுத்தியுள்ளது.