ஆந்திரா... மாமனாருக்கு மது விருந்து வைத்த பாசக்கார மருமகன். போதையில் தள்ளாடிய மாமனாரை இரும்பு ராடால் அடித்துக் கொலை செய்து, சடலத்தை சாலையில் வீசிவிட்டு விபத்து என நாடகம். மருமகனின் நாடகத்தை வெளிச்சத்திற்கு கொண்டு வந்த போஸ்ட் மார்டம் ரிப்போர்ட். இன்சூரன்ஸ் பணத்திற்காக மருமகன் எமனாக மாறியது அம்பலம். கமிஷன் பணத்திற்காக காப்பீட்டு நிறுவன முகவரும் உடந்தை. தனது மகனுடன் சேர்ந்து மாமனாரை கொலை செய்த மருமகனும், காப்பீட்டு நிறுவன முகவரும் சிக்கினார்களா? அவர்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை என்ன?