வெளிநாட்டு நிதி நிறுவனங்கள் மற்றும் வங்கிகளிடம் இருந்து சுமார் 25 ஆயிரத்து 500 கோடி ரூபாய் கடனை பெற முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸ் நிறுவனம் முயற்சிப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. வரும் நிதியாண்டின் முதல் காலாண்டில் தனது வர்த்தகத்தை விரிவு படுத்த நினைக்கும் முகேஷ் அம்பானி, இந்த கடனை வாங்குவதற்காக ஆறு வங்கிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக கூறப்படுகிறது. ரிலையன்ஸ் குழுமத்திற்கு ஏற்கனவே சுமார் 25 ஆயிரம் கோடி ரூபாய் வங்கிக் கடன் நிலுவையில் உள்ளது. இதை அடுத்த ஆண்டு செலுத்த வேண்டிய நிலையில் புதிய கடனுக்கு ரிலையன்ஸ் முயற்சித்து வருகிறது. இந்த கடன் உறுதியானால், ஒரு ஆண்டில் ஒரு இந்திய தொழில் நிறுவனம் வெளிநாட்டில் இருந்து பெறும் அதிக கடன் என்ற பெயர் கிடைக்கும்.