இன்பநிதியின் மடியில் சிந்திய பிஸ்கட் தூளை தட்டிவிட்டு அடுத்த ஆட்சியில் அமைச்சர் பதவிக்கு மூர்த்து இப்போதே துண்டு போட்டுவிட்டதாக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ விமர்சித்துள்ளார். மதுரையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், கள்ளச்சாராயம் அருந்தி இறந்தவர்களுக்கு 10 லட்ச ரூபாய் நிவாரணம், ஜல்லிக்கட்டில் வீர மரணம் அடைந்தால் வெறும் 3 லட்சம் தான் நிவாரணமா என கேள்வி எழுப்பினார்.