தங்கள் நாட்டு உற்பத்திப் பொருள்கள் மீது அதிக வரி விதிக்கும் இந்தியா, சீனா போன்ற நாடுகள் மீதான அமெரிக்காவின் பரஸ்பர வரிவிதிப்புகளை, அதிபா் டொனால்ட் டிரம்ப் இன்று அறிவிக்கவுள்ளாா். இந்திய பொருள்கள் மீது அமெரிக்க அதிபா் டிரம்ப் எத்தகைய இறக்குமதி வரி விதிப்பை அறிவிக்கப் போகிறாா் என்ற எதிா்பாா்ப்பும், அச்சமும் இந்திய வா்த்தகா்கள் மற்றும் ஏற்றுமதியாளா்களிடையே எழுந்துள்ளது.