அமெரிக்காவில், ஆந்திராவை சேர்ந்த தாய் மற்றும் 7 வயது மகன் கொலை செய்யப்பட்ட வழக்கு. தொழில்நுட்ப அறிவை பயன்படுத்தி கொலை செய்ததற்கான தடயங்களை அழித்த Cognizant நிறுவனத்தின் ஊழியர். லேப்டாப் ரத்தத்துளியால் சிக்கிய கொலையாளி. 8 ஆண்டுகளுக்கு பிறகு வெளியான மர்மம். தாயையும், மகனையும் கத்தியால் கொடூரமாக குத்தி கொன்றுவிட்டு கொலையாளி இந்தியாவுக்கு தப்பி வந்தது எப்படி? கொலையாளியை நெருங்கியதா காவல்துறை? நடந்தது என்ன?ஆந்திர மாநிலம், பர்ச்சூர்ல உள்ள திம்மராஜுபாலம் அப்டிங்குற கிராமத்த சேர்ந்தவர் நர்ரா ஹனுமந்த் ராவ். இவரோட மனைவி சசிகலா. இந்த தம்பதிக்கு ஏழு வயசுல அனிஷ் சாய்-ங்குற மகன் இருக்கான். ஆந்திராவுல உள்ள தனியார் நிறுவனத்துல வேலை பாத்துட்டு இருந்த நர்ரா ஹனுமந்துக்கு, அமெரிக்கா நியூ ஜெர்சியில இருக்குற Branch-ல டிரான்ஸ்பர் கிடைச்சிருக்கு. அதனால, குடும்பத்தோட அமெரிக்காவுக்கு போன நர்ரா ஹனுமந்த் மேப்பிள் ஷேடில்-ங்குற பகுதில உள்ள ஃபாக்ஸ் மீடோ அப்டிங்குற அடுக்குமாடி குடியிருப்புல குடும்பத்தோட வாழ்ந்துட்டு இருந்துருக்காரு. வழக்கம்போல, 2017 மார்ச் 23ஆம் தேதி ஆஃபிஸுக்கு கிளம்பி போன நர்ரா ஹனுமந்த், இரவு வீடு திரும்பிருக்காரு. அப்போ, வீடு கதவு திறந்தபடி கிடந்துருக்கு. வீட்டுக்குள்ள மனைவி சசிகலாவும் மகன் அனிஷ் சாயியும் உயிரிழந்து கெடந்துருக்காங்க.மனைவியையும், மகனையும் ரத்த வெள்ளத்துல இருந்தத பாத்து நிலைகுலைந்து போன நர்ரா ஹனுமந்த் அமெரிக்க போலீஸுக்கு இன்பார்ஃம் பண்ணிருக்காரு. ஸ்பாட்டுக்கு வந்த போலீஸ்காரங்க, தாய், மகன் சடலத்த கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வச்சாங்க. அடுத்து, வீடு புகுந்து தனியா இருந்த தாயையும், மகனையும் கொலை செஞ்சது யாருன்னு கண்டுபிடிக்க விசாரணையில இறங்குன போலீஸ்காரங்களுக்கு, நர்ரா ஹனுமந்த் மேல சந்தேகம் வந்துருக்கு. மனைவியையும், மகனையும் இவரே கொலை பண்ணிட்டு ஆக்டிங் பண்றாரோ-ங்குற சந்தேம் எழுந்ததால கிடுக்குபிடி விசாரணை நடத்துனாங்க. அதேநேரம், சசிகலா, அனிஷ் சாய் கொலை செய்யப்பட்ட இடத்துல உள்ள ரத்த மாதிரிகளையும் கைப்பற்றி DNA டெஸ்டுக்கு அனுப்பி வச்சாங்க. ஆனா, வீட்டுல இருந்து கலெக்ட் பண்ண DNA-வும், நர்ரா ஹனுமந்தோட DNA-வும் ஒத்து போகாததால, அவரு குற்றவாளி இல்லன்னு உறுதியாச்சு. அப்ப, உண்மையான கொலையாளி யாரு.? சசிகலா, அனிஷ் சாயோட ரத்தம் சிந்திய இடத்துலேயே, கைப்பற்றப்பட்ட ஒரு துளி மட்டும் மூணு பேருக்கு சம்பந்தம் இல்லனா, அப்ப அந்த DNA யாருடையதுன்னு கண்டுபிடிக்க தீவிர புலன் விசாரணையில இறங்குனாங்க. ஆனா, கிட்டத்தட்ட ஆறு மாசத்துக்கு மேலாகியும் குற்றவாளி யாருனே கண்டுபிடிக்க முடியல. இதுக்கு இடையில, நர்ரா ஹனுமந்த் போலீஸ்கிட்ட ஒரு விஷயத்த சொல்லிருக்காரு. அதாவது, தன்னோட வேலை பாக்குற சக ஊழியரான ஹமீதோட பிரச்சனை ஏற்பட்டதாவும், அதனால, என்ன பழி வாங்குறதுக்காக தன்னோட மனைவியையும், மகனையும் கொலை பண்ணிருக்க வாய்ப்பு இருக்குன்னும் சொல்லிருக்காரு.நர்ரா ஹனுமந்த் வீடு இருக்குற ஏரியாவுல தான் ஹமீதும் குடியிருந்துருக்காரு. உடனே, ஹமீத்கிட்ட விசாரணை நடத்துறதுக்காக அவர் வீட்டுக்கு போனப்ப, ஹமீத் அங்க இல்லனும், இந்தியாவுக்கு வந்ததும் தெரியவந்துச்சு. அதுக்குப்பிறகு, இந்தியாவுல உள்ள ஹமீத தொடர்பு கொண்ட அமெரிக்க போலீஸ், அவரோட DNA-வ டெஸ்டுக்கு கேட்டுருக்காங்க. ஆனா, ஹமீத் அவங்களோட விசாரணைக்கு ஒத்துழைக்காம லா பாய்ண்ட்ஸ்லாம் பேசிருக்காரு. இந்த கொலை கேஸ எப்படி க்ளோஸ் பண்றதுன்னு தெரியாம குழம்பி போயிருந்துருக்காங்க அமெரிக்க போலீஸ். அப்போதான், காவலர்களுக்கு ஒரு ஐடியா கிடைச்சிருக்கு. ஹமீத் யூஸ் பண்ண லேப்டாப்புல இருந்து DNA-வ எடுக்கலாம்னு யோசிச்சிருக்காங்க. அதனால, ஹமீத் வேலை பாத்த நிறுவனத்துல அவரு யூஸ் பண்ண லேப்டாப்ப போலீஸ்ல ஒப்படைக்க உத்தரவு பிறக்கப்பட்டுச்சு. அந்த லேப்டாப் கைக்கு வந்ததும் இன்வெஸ்டிகேஷன தீவிரப்படுத்துன போலீஸ்காரங்க பல தொழில்நுட்பத்த பயன்படுத்தி சோதனையில இறங்குனாங்க. அப்ப, ஹமீத் யூஸ் பண்ண லேப்டாப்புல இருந்து கலெக்ட் பண்ண DNA-வையும் கொலை நடந்த வீட்டுல இருந்த DNA-வையும் ஒப்பிட்டு பாத்ததுல, ரெண்டும் ஒத்து போயிருக்குது. இத வச்சு, ஹமீத் தான் கொலையாளி-ங்குறத கிட்டத்தட்ட 8 வருஷத்துக்கு அப்புறம் கண்டுபிடிச்ச அமெரிக்க போலீஸ், இது சம்பந்தமா ஒரு அறிக்கையையும் வெளியிட்டுருக்காங்க. அதுல, ஹமீத் இப்போ இந்தியாவுல இருக்குறதால, அவர அமெரிக்காவுல ஒப்படைக்கணும்னும், அதேபோல, ஹமீத் இருக்குற இடம் யாருக்காவது தெரிஞ்சா உடனடியா தகவல் தெரிக்க வேண்டும்னும் அமெரிக்க காவல்துறை அதிகாரிகள், இந்திய வெளியுறவுத்துறைக்கிட்ட கேட்டுருக்காங்க. இதையும் பாருங்கள் - வன்கொடுமை செய்து சிறுமி கொ*ல, கனமழையால் வெளியே தெரிந்த 'சடலம்' | CrimeNews | LatestNews