ஒலிம்பிக் போட்டிகளில் இரண்டு பதக்கங்கள் வென்ற இந்திய ஈட்டி எறிதல் வீரர் நீரஜ் சோப்ரா, டென்னிஸ் வீராங்கனையான ஹிமானி மூரை திருமணம் செய்து கொண்டார். இது தொடர்பான புகைப்படங்களை நீரஜ் சோப்ரா சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளார். அதில் தமது வாழ்க்கையில் புதிய அத்தியாயத்தை தொடங்கி உள்ளதாக தெரிவித்துள்ளார்.