அமெரிக்காவை மையமாக கொண்டு இயங்கி வரும் வால்மார்ட் நிறுவனத்தின் புதிய லோகோவை நெட்டிசன்கள் ட்ரோல் செய்து வருகின்றனர். 17 ஆண்டுகளுக்கு பிறகு வால்மார்ட் நிறுவனம் சுமார் 10 கோடி ரூபாய் செலவு செய்து தனது லோகோவின் பின்புற நிறத்தை மட்டும் அடர் நீல நிறத்தில் மாற்றி அதனை புதிய லோகோ என்று சமூக வலைத்தளங்களில் அறிமுகம் செய்தது. இதனைக் கண்ட நெட்டிசன்கள், பழைய லோகோவையே பட்டி டிங்கரிங் செய்து புதிய லோகோவாக வெளியிட்டுள்ளதாக விமர்சித்து வருகின்றனர்