2026 புத்தாண்டை இரவில், ஆட்டம் பாட்டத்துடன் உற்சாகமாக கொண்டாடி வரவேற்ற மக்கள், காலையில் கோயில்களுக்கு சென்று நடப்பாண்டு நன்மை விளையும் ஆண்டாக இருக்க வேண்டும் என வேண்டி, வழிபட்டனர். கோயில்களில் நடந்த சிறப்பு அபிஷேகம் மற்றும் பூஜைகளில் பங்கேற்று, மக்கள் சாமி தரிசனம் செய்த நிகழ்வுகளை இந்த செய்தி தொகுப்பில் பார்க்கலாம்.கபாலீஸ்வரர் கோயிலில் காலை 4 மணிக்கு நடை திறப்புசென்னை, மயிலாப்பூரில் உள்ள கபாலீஸ்வரர் கோயிலில் அதிகாலை 4 மணிக்கு நடை திறக்கப்பட்டு, சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. மழை பெய்தபோதும் குடையுடன் கோயிலுக்கு வந்த பக்தர்கள், புத்தாண்டு சிறப்பு பூஜை மற்றும் மார்கழி மாத உற்சவ பூஜையையும் தரிசித்தனர்.வடபழனி முருகன் கோயிலில் சாமி தரிசனம்சென்னை, வடபழனி முருகன் கோயிலில், குடும்பத்தினருடன் வந்த பக்தர்கள், நீண்ட நேரம் வரிசையில் காத்திருந்து முருகனை தரிசித்தனர்.தங்க கவசத்துடன் அருள்பாலித்த பிள்ளையார்பட்டி விநாயகர்சிவகங்கை மாவட்டம், பிள்ளையார்பட்டியில் பிரசித்தி பெற்ற கற்பக விநாயகர் கோயிலில், தங்க கவசம் அணிந்து அருள்பாலித்த விநாயகரை ஏராளமான மக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து தரிசித்தனர்.விராலிமலை முருகன் கோயிலில் குவிந்த பக்தர்கள்புதுக்கோட்டை மாவட்டம், விராலிமலையில் உள்ள முருகன் கோயிலில் அதிகாலை முதலே குடும்பத்தினருடன் குவிந்த மக்கள், வள்ளி தெய்வானையுடன் மயில் மேல் அமர்ந்த முருகனை வழிபட்டனர்.ராமநாதசுவாமி கோயிலில் சாமி தரிசனம்தொடர் விடுமுறையையொட்டி, ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலில் சில நாட்களாகவே கூட்டம் அதிகரித்து காணப்பட்ட நிலையில், புத்தாண்டு தினமான இன்று வெளி மாவட்டங்கள் மற்றும் வெளிமாநில மக்கள் என, ஏராளமானோர் சாமி தரிசனம் செய்தனர்.திருவந்திபுரம் தேவநாத சுவாமி கோயிலில் திரண்ட பக்தர்கள்கடலூர் அருகே திருவந்திபுரத்தில் உள்ள தேவநாத சுவாமி கோயிலில் திரண்ட பக்தர்கள், சிறப்பு மலர் அலங்காரத்தில் அருள்பாலித்த மூலவரை தரிசித்தனர்.3 டன் மலர்களால் நடந்த அபிஷேகத்தை தரிசித்த பக்தர்கள்நாமக்கல்லில் உள்ள ஆஞ்சநேயர் கோயிலில் 18 அடி உயர ஆஞ்சநேயருக்கு பல்வேறு வண்ண மலர்களால் செய்யப்பட்ட சிறப்பு அபிஷேகத்தை ஏராளமானோர் தரிசித்தனர்.சுமார் 3 மணி நேரம் காத்திருந்து பக்தர்கள் சாமி தரிசனம்நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோட்டில் உள்ள அர்த்தநாரீஸ்வரர் மலைக் கோயிலில் கூட்டம் அதிகமாக இருந்ததால் சுமார் 3 மணி நேரம் வரை காத்திருந்து பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.