கேரளாவில் நிபா வைரஸ் கண்டறியப்பட்டுள்ள நிலையில் தமிழக கேரள எல்லையில் சுகாதாரத்துறை-யின் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.பொதுவான வார விடுமுறை நாட்களில் கேரளாவில் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் தமிழகத்துக்கு படையெடுப்பது வழக்கம் என்பதால் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.கோழிவிளை மற்றும் களியக்காவிளை பகுதியில் கண்காணிப்பில் ஈடுபட்டுள்ள சுகாதாரத்துறை காய்ச்சல் போன்ற அறிகுறிகள் உள்ளதா? என பரிசோதிப்பதோடு, எங்கிருந்து வருகிறார்கள், எங்கு செல்கிறார்கள் போன்ற விவரங்களை குறித்துக்கொண்டு கண்காணித்து வருகின்றனர்.