பீகார் மாநில முதலமைச்சராக, பத்தாவது முறையாக நிதிஷ் குமார் பிரதமர் நரேந்திரமோடி, மத்திய அமைச்சர் அமித்ஷா முன்னிலையில் பதவியேற்றார். மொத்தம் 243 சட்டமன்ற தொகுதிகளை கொண்ட பீகார் மாநில சட்டப் பேரவைக்கு இரண்டு கட்டங்களாக நடைபெற்ற தேர்தலில் நிதிஷ் குமாரின் தலைமையிலான என்டிஏ கூட்டணி 202 தொகுதிகளை கைப்பற்றியது. தேர்தலில் தனி பெரும்பான்மை பெறாத பாஜக ஆட்சி அமைக்க நிதிஷ்குமாரின் உதவி தேவை என்பதால் அவரை முதலமைச்சராக ஏற்றுக்கொண்டது. இதையடுத்து பாட்னாவில் உள்ள காந்தி மைதானத்தில் நடைபெற்ற பதவியேற்பு விழாவில் நிதிஷ்குமார் முதல்வராக பதவியேற்றார். கடந்த 2005 ஆம் ஆண்டு, முதன்முறையாக முதலமைச்சராக பதவியேற்ற நிதிஷ்குமார், கடந்த 20 வருடங்களில் 10 முறை முதலமைச்சராக பதவியேற்றுள்ளார். இதையும் பாருங்கள் - பிரதமர் மோடி முன்னிலையில் CM பதவி ஏற்றார் நிதிஷ் குமார்" இது 10 வது முறை" | NitishKumar | PMModi