கல்லூரி மாணவர்களுக்கு, இலவச லேப்டாப் வழங்குவதை யாராலும் தடுக்க முடியாது என்றும், தேர்தலுக்காக லேப்டாப் தரப்படுகிறது என பொய் பிம்பத்தை அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி ஏற்படுத்த முயற்சிப்பதாகவும் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் குற்றம் சாட்டியுள்ளார். அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், மாணவர்களுக்கு லேப்டாப் கொடுப்பதற்கு முன்பாகவே, அதில் உரிய வசதிகள் இல்லை என எடப்பாடி பழனிசாமி குறை கூறுவதாக சாடியுள்ளார். WINDOWS 11 OS உடன் அதிவேக proccessor மற்றும் அதிகநேரம் தாங்கும் பேட்டரியுடனும், செயற்கை நுண்ணறிவுக்கு ஏற்றவாறு, உயர் தரத்தில் லேப்டாப் வழங்கப்பட உள்ளதாக, துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.