குடியரசுத் தலைவரை அவதூறாக பேசியதாக காங்கிரஸ் எம்.பி. சோனியா காந்தி மீது உரிமை மீறல் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாநிலங்களவைத் தலைவர் ஜகதீப் தங்கரிடம் பாஜக எம்பிக்கள் 40 பேர் வலியுறுத்தியுள்ளனர். நாடாளுமன்றத்தில் குடியரசு தலைவர் உரையாற்றியது குறித்து கருத்து தெரிவித்த சோனியா காந்தி, நீண்ட உரையை அவர் வாசித்ததை பார்க்க பாவமாக இருந்ததாக கூறியது பேசுபொருளானது.