கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டத்துக்கு ரூ.13,807 கோடி நிதி ஒதுக்கீடு. இதுவரை பலன்பெறாதோருக்கு உரிமைத்தொகை வழங்க நடவடிக்கை10,000 மகளிர் சுய உதவிக் குழுக்கள் உருவாக்கப்படும். இவற்றின் மூலம் ரூ.37,000 கோடி கடன் வழங்கிட இலக்கு நிர்ணயம்மகளிர் விடியல் பயண திட்டத்துக்கு ரூ.3,600 கோடி; புதுமை பெண் திட்டத்திற்காக ரூ.420 கோடி ஒதுக்கீடுசென்னை, கோவை, மதுரையில் தலா 1,000 மாணவிகள் பயன்பெறும் வகையில் ரூ.275 கோடியில் மாணவியர் விடுதிகள் உருவாக்கப்படும்ரூ.77 கோடி மதிப்பீட்டில் 10 இடங்களில் 800 பணிபுரியும் பெண்கள் பயனடையும் வகையில் தோழி விடுதிகள் உருவாக்கப்படும்ரூ.75 கோடி மதிப்பீட்டில் நகர்புறப் பகுதிகளில் பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்ய புதிய திட்டம்.