மார்ச் 14 மற்றும் 15-ம் தேதிகளில் கச்சத்தீவு திருவிழா நடைபெறவுள்ள நிலையில், இதில் பங்கேற்க 75 விசைப்படகுகள் மற்றும் 16 நாட்டு படகுகளில் சுமார் 3000 பக்தர்கள் செல்ல உள்ளதாக ஒருங்கிணைப்பு குழுவினர் தெரிவித்துள்ளனர். ஏற்பாடுகள் தொடர்பான மனுவை ஆட்சியரிடம் வழங்கிய அவர்கள், 6-ம் தேதி முதல் விண்ணப்ப படிவம் வழங்கப்படும் என்று தெரிவித்துள்ளனர்.