ஒரேநாடு ஒரே தேர்தல் மசோதாவை நடப்பு குளிர்கால கூட்டத்தொடரிலேயே அறிமுகம் செய்ய மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்தியாவில் மக்களவை தேர்தலுடன் அனைத்து மாநிலங்களின் சட்டமன்ற தேர்தல்களையும் ஒரே நேரத்தில் நடத்தி முடிக்க மத்திய அரசு ஒரே நாடு, ஒரே தேர்தல் திட்டத்தை முன்மொழிந்தது. இதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து ஆராய முன்னாள் குடியரசுத் தலைவர் ராம் நாத் கோவிந்த் தலைமையில் குழு அமைக்கப்பட்ட நிலையில், அந்த குழு தாக்கல் செய்த அறிக்கைக்கு மத்திய அரசு ஒப்புதல் வழங்கியது. இந்நிலையில் நடப்பு கூட்டத்தொடரிலேயே அந்த மசோதாவை தாக்கல் செய்ய மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. மேலும் மசோதா மீதான விரிவான ஆலோசனைக்காக நாடாளுமன்ற கூட்டுக்குழுவிற்கு அனுப்ப வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது