ஒரே நாடு; ஒரே தேர்தல் நிதிச் சுமையை குறைக்கும் என குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு தெரிவித்துள்ளார். குடியரசு தினத்தையொட்டி நாட்டு மக்களிடையே உரையாற்றிய அவர், நாட்டில் பல ஆண்டுகளாக நிலவி வரும் காலனித்துவ மனப்பான்மையை முற்றிலும் ஒழிக்க அரசு தொடர் நடவடிக்கையை மேற்கொண்டு வருவதாக கூறினார். ஒரே நாடு ஒரே தேர்தல் முறையால் நிர்வாக திறன் மேலும் மேம்படும் எனவும் அவர் தெரிவித்தார்.