இங்கிலாந்து நாட்டில், வாரத்தில் 4 நாட்கள் மட்டுமே வேலை நாட்களாக நிர்ணயித்து 200 நிறுவனங்கள் முடிவு செய்துள்ளன. வாரத்திற்கு 4 நாட்கள் பணிபுரிவதால் ஊழியர்கள் தங்களின் வாழ்க்கையை சந்தோஷமாகவும், நிறைவுடனும் வாழ முடியும் என தெரிவித்துள்ள நிறுவனங்கள், இது ஊழியர்களின் மனநலனையும் உடல்நலனையும் மேம்படுத்தும் எனவும் கூறியுள்ளன.