வீட்டுக்குள் பேச்சு மூச்சு இன்றி மயங்கி கிடந்த தாய், தந்தை. மருத்துவமனைக்குள் நுழைவதற்கு முன் பரிதாபமாக பிரிந்த உயிர். கட்டிலுக்கு அடியில் இருந்த ஊசிகளை வைத்து துப்பு துலக்கிய காவல்துறையினர். பெற்ற மகளே தாய், தந்தைக்கு எமனானது ஏன்? கொலை செய்யும் அளவிற்கு அப்படி என்ன காரணம்? நடந்தது என்ன?அதிகாலையில் அசோக்கிற்கு வந்த ஃபோன் கால்வழக்கம்போல வீட்டுல இருந்த அசோக்-ங்குற இளைஞருக்கு அவரோட தங்கச்சி சுரேகாகிட்ட இருந்து ஃபோன் வந்திருக்கு. அதிகாலையிலேயே தங்கச்சி எதுக்கு கால் பண்றாருங்குற சந்தேகத்தோடேயே ஃபோன் கால அட்டண்ட் பண்ணிருக்காரு அசோக். அப்போ, அப்பாவும், அம்மாவும் மூச்சு பேச்சு இல்லாம கிடக்குறாங்க, வேகமா வீட்டுக்கு வான்னு சொல்லிருக்காங்க சுரேகா. உடனே, அசோக்கும் பதறியடிச்சுட்டு தாய், தந்தைய பாக்க போய்ருக்காரு. கட்டில் மேல தாய், தந்தை ரெண்டு பேரும் மூச்சு பேச்சு இல்லாம கிடந்தத பாத்து, பதறிப்போன அசோக், ரெண்டு பேரையும் ஹாஸ்பிட்டலுக்கு கொண்டு போயிருக்காரு. தாய் - தந்தைக்கு ஊசி செலுத்தப்பட்ட தடயங்கள்அவங்கள பரிசோதனை பண்ண மருத்துவர்கள், ரெண்டு பேரும் ஏற்கனவே உயிரிழந்துட்டதா சொல்லிட்டாங்க. அத கேட்டதும் அசோக் மருத்துவமனையிலேயே கதறி அழுதுருக்காரு. நல்லா இருந்தவங்க திடீர்னு எப்படி உயிரிழந்தாங்கன்னு தெரியலேயேன்னு சொல்லி கதறி அழுத அசோக், தாய், தந்தையோட கை பகுதில ஊசி போட்ட தடம் இருந்தத கவனிச்சிருக்காரு. அதுக்குப்பிறகு, ரெண்டு சடலத்தையும் போஸ்ட் மார்டத்துக்கு அனுப்பி வச்ச போலீஸ், வீட்டுல இருந்த சுரேகாகிட்ட என்ன நடந்துச்சுன்னு தெரிஞ்சுக்க விசாரணை பண்ணிருக்காங்க. போலீஸ் விசாரணையில் வெளிவந்த அதிர்ச்சி தகவல்அப்போ, தாய், தந்தை ரெண்டு பேரும் படுத்திருந்த கட்டிலுக்கு அடியில ஊசிகள் கிடந்தத பார்த்த அசோக், தன்னோட பெற்றோர் மரணத்துல சந்தேகம் இருக்குறதா சொல்லிருக்காரு. அவரு குடுத்த புகார் அடிப்படையில வழக்குப்பதிவு பண்ண போலீஸ், சுரேகாவ கஸ்டடியில எடுத்து விசாரிச்சப்பதான், பல திடுக்கிடும் தகவல்களாம் வெளிச்சத்துக்கு வந்துச்சு. மகள் வேறு சாதி இளைஞரை காதலித்ததால் ஆத்திரம்தெலங்கானா மாநிலம், விகாராபாத்த சேர்ந்த தசரத் - லட்சுமி தம்பதிக்கு ரெண்டு பசங்க. மூத்த மகனான அசோக் கல்யாணமாகி மனைவி, குழந்தைகளோட தனியா வாழ்ந்துட்டு வறாரு. இதுக்கு நடுவுல, இளைய மகள் சுரேகாவுக்கு தந்தை தசரத் வரன் பாத்துட்டு இருந்துருக்காரு. இந்த சூழல, சுரேகாவும், அதே கிராமத்த சேர்ந்த ஆட்டோ டிரைவரும் காதலிச்சதா சொல்லப்படுது. மகளோட காதல் விஷயம் தெரிஞ்சு, சுரேகாவோட அப்பா தசரத் கோபப்பட்டிருக்காரு. அதுக்கு முக்கிய காரணம், அந்த ஆட்டோ டிரைவர், வேற சாதிய சேர்ந்தவரு. என்ன நடந்தாலும், வேற சாதி பையனுக்கு என் பொண்ண கட்டிக் கொடுக்க மாட்டேன்னு தசரத்தும், தாய் லட்சுமியும் பிடிவாதமா இருந்துருக்காங்க. அதே மாதிரி சுரேகாவும் தன்னோட காதல்ல உறுதியா இருந்துருக்காங்க. இதனால பெற்றோருக்கும், மகளுக்கும் இடையில கடந்த சில நாட்களாவே அடிக்கடி மோதல் ஏற்பட்டிருக்கு. பெற்றோர் காதலுக்கு மறுப்பு தெரிவித்ததால் ஆத்திரம்தன்னோட மகள் வேற சாதி பையன கல்யாணம் பண்ணிக்கிட்டா ஊர் முன்னாடி தலை குனிஞ்சு நிக்க வேண்டியிருக்கும்ன்னு நினைச்ச தசரத், மகள்கிட்ட இந்த காதல குழி தோண்டி புதச்சிருன்னு எவ்வளவோ சொல்லி பாத்தும் சுரேகா அத கேட்கல. இப்படியே போயிட்டு இருந்தா அப்பாவும், அம்மாவும் நம்மள காதலன்கூட சேத்து வைக்க மாட்டாங்கன்னு நினைச்ச சுரேகா, காதலனுக்காக பெத்த தாய், தந்தைன்னு கூட பாக்காம கொலை செய்யவும் முடிவு எடுத்திருக்கா. தாய், தந்தைக்கு அனஸ்தீசியா ஊசிய செலுத்திய சுரேகாசம்பவத்தன்னைக்கு தான் நர்ஸா வேலை பாக்குற ஹாஸ்பிட்டல இருந்து நாலஞ்சு அனஸ்தீசியா ஊசிகள வீட்டுக்கு எடுத்துட்டு வந்துருக்கா. அப்ப வீட்டுல இருந்த தாய் லட்சுமிக்கிட்ட போனவங்க, உனக்கு கை, கால்களாம் வலிக்குதுன்னு சொன்னீங்கலம்மா, இந்த ஊசி போட்டா சரியாகிடும்னு சொல்லி, அந்த அனஸ்தீசியா ஊசிய போட்டு விட்டுருக்காங்க. அத போட்டதும் தாய் லட்சுமி கொஞ்ச நேரத்துலேயே மயக்கமடைஞ்சு உயிரிழந்துட்டாங்க. மகள் சுரேகாவை கைது செய்து காவல்துறையினர் விசாரணைஅதுக்குப்பிறகு, வேலையில இருந்து வந்த தசரத்துக்கும் அதே டயலாக்க சொல்லி ஊசிய போட்டுருக்கா சுரேகா. தாய், தந்தை ரெண்டு பேரும் உயிரிழந்துட்டதா உறுதிப்படுத்துன சுரேகா, மறுநாள் காலையில தன்னோட அண்ணனுக்கு ஃபோன் பண்ணி அப்பாவும், அம்மாவும் மூச்சு பேச்சு இல்லாம கிடக்குறதா ஃபோன் பண்ணி சொல்லி நாடகமாடிருக்கா. விசாரணையில மொத்த உண்மையும் தெரியவரவே, சுரேகா மேல கொலை வழக்குப்பதிவு பண்ண போலீஸ் அவள கைது பண்ணி ஜெயில்ல அடைச்சிட்டாங்க. Related Link வேறொரு பெண்ணுடன் ஆசிரியருக்கு லிங்க்