நெல்லை, தென்காசி மாவட்டங்களுக்கு இன்று ஆரஞ்ச் அலர்ட். மிக கனமழை பெய்யக் கூடும் என்றும் வானிலை மையம் எச்சரிக்கை.தஞ்சை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, புதுக்கோட்டை மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை மையம் தகவல். சிவகங்கை, ராமநாதபுரம், விருதுநகர், தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டங்களிலும் கனமழை பெய்யக் கூடும் எனவும் வானிலை அறிக்கை.சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு உள்ளிட்ட 7 மாவட்டங்களுக்கு 29ஆம் தேதி ஆரஞ்ச் அலர்ட். 30ஆம் தேதி அன்று திருவள்ளூர் மாவட்டத்தில் கன முதல் மிக கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும் எச்சரிக்கை.தஞ்சை, திருவாரூர், நாகை மாவட்டங்களுக்கு 28ஆம் தேதி மிக கனமழை எச்சரிக்கை. இதே மாவட்டங்களில் முந்தைய நாளில் கனமழை பெய்யக் கூடும் என்றும் வானிலை மையம் கணித்துள்ளது.