கேள்வியால் டென்ஷன், நடிகை குறித்து கேட்ட போது வெட்கப்பட்ட யோகிபாபு ஆடியோ வெளியீட்டு விழாவிற்கு, நடிகர் யோகி பாபு வருவதில்லை என கேட்ட போது, டென்ஷனின் உச்சத்திற்கு சென்ற யோகிபாபு, கடைசியில் கூலான சம்பவம் வைரல் ஆகி வருகிறது. ’மார்க்’ படக்குழு செய்தியாளர்களை சந்தித்த போது, திரைப்பட விழாவிற்கு பணம் வாங்கிக்கொண்டு வருவதில்லை என புகார் வருகிறதே, என யோகிபாபுவிடம் சரமாரி கேள்வி கேட்கப்பட்டது. அப்போது மேடையிலேயே டென்ஷன் ஆன யோகிபாபு, அந்த படத்தில் நான் நடித்ததே 2 சீன் தான், அந்த பட தயாரிப்பாளரை வரச்சொல்லுங்கள், உட்கார்ந்து பேசுவோம் என கொந்தளித்தார். இதுமட்டுமின்றி, தான் திரைத்துறைக்கு வந்து 22 ஆண்டுகளாகிவிட்டது என்ற யோகிபாபு, நெகிழ்ச்சியுடன் பேசி, கடைசியில் இந்த படத்தை பற்றி மட்டும் பேசுங்க என்று கூறினார். இந்நிலையில், நடிகைகளின் பக்கத்துல நின்னு கூட ஆட மாட்டேன் என்கிறீர்களே என்று, நடிகர் சுதீப்பிடம் கேள்வி கேட்கப்பட, பக்கத்தில் இருந்த யோகிபாபு சட்டென்னு வெட்கப்பட்டார். ஒரு வழியாக, யோகிபாபுவை டென்ஷன் ஆக்கி, கலகலப்பாகவே முடிந்தது படக்குழு சந்திப்பு... பட்டைய கிளப்பும் ‘45’ பட டிரைலர்கருநாட சக்ரவர்த்தி என்ற அழைக்கப்படும், டாக்டர் சிவராஜ்குமார், ரியல் ஸ்டார் உபேந்திரா, பிரபல விமர்சகர்களின் பாராட்டைப் பெற்ற நடிகரும் இயக்குனருமான ராஜ் பி.ஷெட்டி ஆகியோர் கூட்டணியில் உருவாகும் படம் 45. இவர்கள் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்துள்ள, 45 பட டிரைலர் வெளியாகி உள்ளது. இசையமைப்பாளர், இயக்குனர் அர்ஜுன் ஜன்யா இயக்கி இசையமைக்கும் இந்த படம், ஜனவரி 1ஆம் தேதி பிரம்மாண்டமாக, திரை அரங்குகளில் திரையிட தயாராகியுள்ளது. இந்த திரைப்படம், கன்னட மொழியில் உருவாகும் ஒரு அதிரடி நகைச்சுவைத் திரைப்படமாகும். இது, அர்ஜுன் ஜன்யா இயக்குநராக அறிமுகமாகி, சூரஜ் புரொடக்சன்ஸ் பேனரின் கீழ் ரமேஷ் ரெட்டி தயாரித்துள்ள படமாகும்... செல்வராகவன் – கீதாஞ்சலி பிரிவா? சமூகவலை தளத்தில் சந்தேகம் ‘துள்ளுவதோ இளமை’ படம் மூலம் இயக்குநராக சினிமாவில் அறிமுகமானவர் செல்வராகவன். தொடர்ந்து ‘காதல் கொண்டேன்’, ‘7ஜி ரெயின்போ காலனி’, ‘புதுப்பேட்டை’, ‘ஆயிரத்தில் ஒருவன்’ உள்ளிட்ட படங்களை இயக்கி தனித்த அடையாளம் பெற்றார். ‘7ஜி ரெயின்போ காலனி 2’, ‘மெண்டல் மனதில்’ ஆகிய படங்களை இயக்கி வரும் அவர், நடிப்பிலும் கவனம் செலுத்தி வருகிறார். தனிப்பட்ட வாழ்க்கையில், 2006ஆம் ஆண்டு நடிகை சோனியா அகர்வாலை காதலித்து திருமணம் செய்த செல்வராகவன், பின்னர் அவரை பிரிந்தார். இதையடுத்து, தன்னிடம் உதவி இயக்குநராக பணியாற்றிய கீதாஞ்சலியை 2011ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ஒரு மகளும், இரண்டு மகன்களும் உள்ளனர். இந்த நிலையில், கீதாஞ்சலி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் செல்வராகவனுடன் உள்ள அனைத்து புகைப்படங்களையும் திடீரென நீக்கியுள்ளார். இதனால், இருவரும் பிரிய இருப்பதாக சமூக வலைதளங்களில் பேசப்பட்டு வருகிறது. ஆனால், இது தொடர்பாக இதுவரை அதிகாரப்பூர்வ விளக்கம் எதுவும் வெளியாகவில்லை.பிரதமர் மோடி பார்க்க ஆசைப்பட்ட படம்‘அகண்டா 2’ திரைப்படத்தை பார்க்க பிரதமர் மோடி ஆர்வம் காட்டியதாக, இயக்குநர் போயபட்டி சீனு தகவல் தெரிவித்துள்ளார். பாலய்யா என ரசிகர்களால் கொண்டாடப்படும் நடிகர் பாலகிருஷ்ணா நடித்துள்ள ‘அகண்டா 2’ திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பைப் பெற்று வருகிறது. வெளியான குறுகிய காலத்திலேயே இந்த படம் ₹100 கோடி வசூலை கடந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த நிலையில், ‘அகண்டா 2’ படம் குறித்து கேள்விப்பட்ட பிரதமர் நரேந்திர மோடி, அதைப் பார்க்க விருப்பம் தெரிவித்துள்ளதாக இயக்குநர் போயபட்டி சீனு கூறியுள்ளார். படத்தின் கருத்தும் தாக்கமும் பிரதமரின் கவனத்தை ஈர்த்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார்.கில்லியை முந்தும் படையப்பா, ரசிகர்கள் உற்சாகம் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்தின் 75ஆவது பிறந்தநாளை முன்னிட்டு மீண்டும் திரையரங்குகளில் வெளியான ‘படையப்பா’, ரீ-ரிலீஸிலும் வசூல் வேட்டையை தொடங்கியுள்ளது. முதல் மூன்று நாட்களில் இப்படம் ரூ.4 கோடி வரை வசூலித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும், கூடுதலாக 100க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் படம் திரையிடப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.ரீ-ரிலீஸ் வசூலில் தற்போது முன்னணியில் இருக்கும் ‘கில்லி’ படத்தின் ரூ.10 கோடி சாதனையை, இன்னும் ஓரிரு நாட்களில் ‘படையப்பா’ முறியடிக்கும் என எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.விஜய் உடன் நேரடி மோதல் இல்லை, பின் வாங்கிய SK நடிகர் சிவகார்த்திகேயன் நடித்துள்ள ‘பராசக்தி’ திரைப்படம் திட்டமிட்டதைவிட முன்னதாக ஜனவரி 9ஆம் தேதி வெளியாகும் என சமீபத்தில் செய்திகள் பரவின. அதே நாளில் விஜய் நடித்த ‘ஜனநாயகன்’ படம் திரைக்கு வர உள்ளதால், சிவகார்த்திகேயன் விஜய் உடன் நேரடி போட்டிக்கு தயாராகிவிட்டாரா என்ற கேள்வியும் எழுந்தது.இந்நிலையில், ‘பராசக்தி’ படக்குழு வெளியிட்டுள்ள புதிய போஸ்டர்களில், படம் ஜனவரி 14ஆம் தேதியே வெளியாகும் என தெளிவுபடுத்தியுள்ளது. இதன் மூலம் பரவியிருந்த அனைத்து வதந்திகளுக்கும் முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது. சுதா கொங்கரா இயக்கி வரும் ‘பராசக்தி’ படத்தில் சிவகார்த்திகேயன், ரவி மோகன், அதர்வா, ஸ்ரீலீலா உள்ளிட்ட பலர் நடித்து வருகிறார்கள். டான் பிக்சர்ஸ் தயாரித்து வரும் இப்படத்துக்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ளார். திரையில் சிவன், சாமியாடிய பெண்கள்சினிமா என்பது வெறும் பொழுதுபோக்கு அல்ல; அது உணர்வுகளின் வெளிப்பாடு. சிரிப்பு, அழுகை, கோபம் போலவே, சில காட்சிகள் பார்வையாளர்களை ஆழ்ந்த பக்தியிலும் ஆழ்த்திவிடுகின்றன. தெலுங்கு நடிகர் நந்தமூரி பாலகிருஷ்ணா நடித்த ‘அகண்டா 2’ திரைப்படத்தில் இடம்பெறும் சிவனின் ருத்ரதாண்டவம் ஆடும் காட்சி, தியேட்டரில் இருந்த ரசிகர்களை உணர்ச்சி வசப்படுத்தியது. அந்தக் காட்சியை பார்த்துக் கொண்டிருந்த பெண் ஒருவர், திடீரென பக்தி பரவசத்தில், அருள் வந்து சாமி ஆடியுள்ளார். இந்த சம்பவத்தின் வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வேகமாக வைரலாகி வருகிறது.