ஈரான் நாட்டிற்கு மீன்பிடித் தொழில் செய்வதற்காக சென்று பஹ்ரைன் கடற்படையால் கைது செய்யப்பட்டு விடுவிக்கப்பட்ட திருநெல்வேலி மாவட்ட மீனவர்கள் 28 பேர் தாயகம் திரும்பினர். திருவனந்தபுரம் விமான நிலையம் வந்தடைந்த மீனவர்களை, குடும்பத்தினர், உறவினர்கள் மற்றும் பல்வேறு அரசியல் கட்சியினர் திரண்டு வரவேற்றனர். சபாநாயகர் அப்பாவு மற்றும் நெல்லை எம்பி ராபர்ட் ப்ரூஸ் ஆகியோர் விமான நிலையத்திற்குள் சென்று மீனவர்களை வரவேற்ற நிலையில், நாகர்கோயில் எம்.எல்.ஏ எம்.ஆர்.காந்தி தலைமையில் பாஜகவினர் விமான நிலைய வாசலில் நின்று வரவேற்றனர். மீனவர்களை வரவேற்க அரசியல் கட்சியினர் போட்டி போட்டு நின்றதால், விமான நிலைய பகுதி பரபரப்பாக காணப்பட்டது.