தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிரான 3-வது ஒருநாள் போட்டியில் வெற்றி பெற்ற பாகிஸ்தான் அணி, தொடரை முழுமையாக வென்று அசத்தியுள்ளது. முதல் இரண்டு போட்டிகளிலும் வெற்றி பெற்ற பாகிஸ்தான் அணி, தொடரை ஏற்கனவே கைப்பற்றி இருந்தது. இந்நிலையில் இரு அணிகளுக்கு இடையிலான 3-வது மற்றும் கடைசி ஒருநாள் போட்டியில் டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்கா அணி பந்து வீசுவதாக அறிவித்த நிலையில், மழை காரணமாக 47 ஓவர்களாக ஆட்டம் குறைக்கப்பட்டது. அதன்படி முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் அணி 9 விக்கெட்டுக்கு 308 ரன்கள் குவித்தது. இதனையடுத்து 309 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய தென் ஆப்பிரிக்கா அணி 42 ஓவரில் 271 ரன்கள் எடுத்து ஆல் அவுட்டானது. இதனால் டக்வொர்த் லிவிஸ் முறையில் 36 ரன் வித்தியாசத்தில் பாகிஸ்தான் வெற்றி பெற்றது.