இந்தியாவின் மிகவும் தேடப்படும் பயங்கரவாதிகளுடன் பாகிஸ்மானின் பஞ்சாப் அமைச்சர்கள் மேடையைப் பகிர்ந்து விழாவில் பங்கேற்றது மூலம் பயங்கரவாத அமைப்புடனான பாகிஸ்தானின் தொடர்பு அம்பலமானது. பஞ்சாப் மாகாணத்தின் கசூர் மாவட்டத்தில் நடைபெற்ற ஒரு நிகழ்வின் போது அமைச்சர்கள், பஹல்காம் தாக்குதலில் குற்றம் சாட்டப்பட்ட சையிபுல்லா கசூரி முதல் பயங்கரவாத அமைப்பான லஷ்கர் இ தொய்பாவின் நிறுவனரான ஹபீஸ் சயீத்தின் மகன் உட்பட, ஐ.நா.வால் அறிவிக்கப்பட்ட பயங்கரவாதக் குழுவின் பல உயர் தலைவர்களை மேடையில் அமரவைத்து நிகழ்ச்சி நடத்தினர்.