சுதா கொங்கரா இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கும் பராசக்தி திரைப்படத்திற்காக மதுரை ரயில் நிலையம் மற்றும் டெல்லி போன்று செட் அமைக்கப்பட்டு இலங்கையில் படப்பிடிப்பு பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. இந்தி எதிர்ப்பு கதையை மையமாக வைத்து படம் உருவாகி வருவதால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்து வருகிறது.