கர்நாடகா... திடீரென வீட்டில் இருந்து கேட்ட முதியவரின் அழுகை சத்தம். நெஞ்சுவலி ஏற்பட்டு லிவ் இன் பார்ட்னர் உயிரிழந்துவிட்டதாக நாடகமாடிய முதியவர். பிரேத பரிசோதனையில் வெளியான திடுக்கிடும் தகவல். காதலியின் கழுத்தில் காயங்கள் இருந்ததாக அதிர்ச்சி ரிப்போர்ட். காதலியை முதியவரே கொலை செய்தது ஏன்? இருவருக்கும் இடையே அப்படி என்ன பிரச்னை?லிவ் இன் பார்ட்னர் நெஞ்சுவலியால் உயிரிழந்து விட்டதாக நாடகம்அதிகாலை நேரம். முதியவர் ஸ்ரீசைல் பாட்டீல் வீட்ல இருந்து அழுகை சத்தம் கேட்ருக்கு. இதகேட்ட பக்கத்து வீட்டுக்காரங்க முதியவரோட வீட்டுக்கு ஓடிப்போய் பாத்துருக்காங்க. அங்க யமனவ்வா-ங்குற பெண் உயிரிழந்து கிடந்துருக்காங்க. இதபாத்த பக்கத்து வீட்டுக்காரங்க, யமனவ்வா எப்படி உயிரிழந்தாங்கன்னு, அவங்களுக்கு என்ன ஆச்சுன்னு அந்த முதியவர் கிட்ட கேட்ருக்காங்க. அதுக்கு முதியவர் நேத்து நைட்டெல்லாம் இவ, நல்லா தான் இருந்தா, ஆனா காலையில திடீருன்னு நெஞ்சு வலி ஏற்பட்டு உயிரிழந்துட்டான்னு சொல்லி அழுதுருக்காரு. இந்த விஷயத்த கேள்விப்பட்டு ஸ்பாட்டுக்கு வந்த போலீஸ் விசாரணையில இறங்குனாங்க. அப்ப ஸ்ரீசைலோட நடவடிக்கைய பாத்து சந்தேகமடைஞ்ச போலீஸ், சடலத்த மீட்டு போஸ்ட் மார்டத்துக்கு அனுப்பி வச்சுருக்காங்க. அதுபடி மறுநாள் வெளியான ரிப்போர்ட்ல, யமனவ்வாவோட கழுத்துல காயங்கள் இருந்ததா குறிப்பிட்டு இருந்துச்சு. இதனால இது கொலைன்னு உறுதிச் செஞ்ச போலீஸ் முதியவர் ஸ்ரீசைல் பாட்டீல் கிட்ட இருந்து விசாரணைய ஸ்டார்ட் பண்ணிருக்காங்க.40 வயசான யமனவ்வா, 67 வயதான ஸ்ரீ சைல் பாட்டீலுடன் பழக்கம்கர்நாடகாவுல உள்ள பாகல்கோட் ஜம்கண்டி பகுதிய சேந்த நபர் ஒருத்தரும், 40 வயசான யமனவ்வாவும் கிட்டத்தட்ட 20 வருஷத்துக்கு முன்னாடி கல்யாணம் பண்ணிக்கிட்டாங்க. ஆனா கருத்து வேறுபாடு காரணமா பிரிஞ்சு போன இந்த ரெண்டு பேரும் தனித்தனியா வாழ ஆரம்பிச்சாங்க. இதுக்கிடையில யமனவ்வாவுக்கு 67 வயசான ஸ்ரீ சைல் பாட்டீல் கூட பழக்கம் ஏற்பட்டிருக்கு. அதுக்கடுத்து ரெண்டு பேரும் திருமணம் செஞ்சுக்காம ஸ்ரீ சைல்லோட தோட்டத்து வீட்ல ஒன்னா வாழ ஆரம்பிச்சுருக்காங்க. அப்ப 27 வயசு இளைஞர் ஒருத்தரு அந்த தோட்டத்துக்கு வேலைக்கு வந்துருக்காரு. அந்த இளைஞர் கூட யமனவ்வா ரொம்ப நெருக்கமா பேசிப் பழக ஆரம்பிச்சுருக்காங்க. முதியவர் வீட்ல இல்லாத நேரத்துல அந்த இளைஞர அடிக்கடி வீட்டுக்கு கூப்டுற யமனவ்வா அவரு கூட தனிமையிலையும் இருந்துருக்காங்க.27 வயது இளைஞருடன் பழகி வந்த யமனவ்வாஇத தெரிஞ்சு கோபமான முதியவர், யமனவ்வாவ கண்டிச்சுருக்காரு. அதுக்கு அப்பெண், நீ என்ன எனக்கு தாலி கட்டிய புருஷன் மாதிரி கேள்வி கேட்குற, எனக்கு அந்த இளைஞர பிடிச்சுருக்கு, அதனால நான் அவன் கூட ஊர் சுத்துவேன், நீ என்னைய கேள்வி கேட்குற வேலைய வச்சுக்காதன்னு சொல்லி சண்டை போட்ருக்காங்க. இதனால ரெண்டு பேருக்கு இடையில பயங்கர பிரச்னை ஏற்பட ஆரம்பிச்சுருக்கு. இதனால ஸ்ரீசைல் தன்னோட காதலிய கொலை செய்ய திட்டம் போட்ருக்காரு. சம்பவத்தன்னைக்கு ஸ்ரீசைலும், யமனவ்வாவும் நைட்டு நேரத்துல வீட்ல இருந்துருக்காங்க. அப்ப இதுசம்பந்தமா ரெண்டு பேருக்கு இடையில மறுபடியும் பயங்கர பிரச்னை ஏற்பட்டிருக்கு.யமனவ்வா நெஞ்சு வலி ஏற்பட்டு உயிரிழந்ததாக நாடகம்அப்ப யமனவ்வாவ அந்த முதியவர் சரமாரியா போட்டு அடிச்சுருக்காரு. அந்த நேரத்துல வீட்ட தொறந்துட்டு வெளியில ஓடப்பாத்துருக்காங்க யமனவ்வா. ஆனா அவங்கள வீட்டுக்குள்ள இழுத்துப்போட்ட முதியவர், யமனவ்வாவ கழுத்த நெரிச்சு கொன்னுருக்காரு. அடுத்து யமனவ்வா நெஞ்சுவலி ஏற்பட்டு உயிரிழந்துட்டதா அக்கம் பக்கத்துல உள்ளவங்க கிட்ட பொய் சொல்லிருக்காரு. ஆனா, போஸ்ட் மார்டம் ரிப்போர்ட் மூலமா எல்லா உண்மையையும் கண்டுபிடிச்ச போலீஸ், முதியவர் ஸ்ரீசைல் பட்டீல்ல அரெஸ்ட் பண்ணி சிறையில அடைச்சுட்டாங்க.இதையும் பாருங்கள் - 14 வயது சிறுமிக்கு லவ் டார்ச்சர், பாலியல் பலாத்காரம்