அமெரிக்காவில் ராணுவ ஹெலிகாப்டருடன், பயணிகள் விமானம் ஒன்றோடு ஒன்று நேருக்கு நேர் மோதி பயங்கர விபத்து ஏற்பட்டதன் சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது.அமெரிக்காவின் வாஷிங்டன் டிசி யில் நடுவானில் பிளாக் ஹாக் எனப்படும் ராணுவ ஹெலிகாப்டர் மீது அமெரிக்கன் ஏர்லைன்சின் பயணிகள் விமானம் ஒன்று பயங்கரமாக மோதியது. ரோனால்ட் ரீகன் விமான நிலையத்திற்கு சென்று கொண்டிருந்த ஹெலிகாப்டர் மீது விமானம் மோதி விபத்து ஏற்பட்டது.விபத்துக்குள்ளான விமானத்தில் 64 பேரும், ஹெலிகாப்டரில் 3 ராணுவ வீரர்களும் பயணம் செய்ததாக கூறப்படுகிறது.விமானம் மற்றும் ஹெலிகாப்டர் இரண்டும் போடோமாக் என்ற ஆற்றில் விழுந்தநிலையில் தற்போது வரை 18 பேரில் உடல்கள் ஆற்றில் இருந்து மீட்கப்பட்டுள்ளன. இந்த விபத்து நடந்த இடம் அமெரிக்க வெள்ளை மாளிகையில் இருந்து சுமார் 5 கிலோ மீட்டர் தொலைவில் இருப்பதாகவும் கூறப்படுகிறது.