கர்நாடக மாநிலம் கோலார் மாவட்டத்தில் இருந்து பெங்களூரு வரை இயக்கப்படும் மின்சார ரயலில் பெட்டிகள் குறைக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து பயணிகள் போராட்டத்தில் ஈடுபட்டதால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. இதயைடுத்து பேச்சுவார்த்தை நடத்திய ரயில்வே அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பதாக கூறியதை தொடர்ந்து அனைவரும் கலைந்து சென்றனர்.