தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கு எதிரான திமுக குடும்ப ஆட்சியை மக்கள் தூக்கி எறிவார்கள் என மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் என்றும், நடைபெறவுள்ள சட்டமன்றத் தேர்தலில் இபிஎஸ் தலைமையிலான அதிமுக கூட்டணி மிகப்பெரிய வெற்றி பெறும் எனவும் நம்பிக்கை தெரிவித்துள்ளார். தேர்தல் களத்தில் என்டிஏஅ.தி.மு.க., பா.ஜ., கூட்டணியில் பாமக தலைவர் அன்புமணி இணைந்தார். அன்றைய தினம் முதலே அரசியல் களம் விறுவிறுப்பானது. சென்னையை அடுத்த மதுராந்தகத்தில், பிரதமர் மோடி பங்கேற்கும் பொதுக்கூட்டம் நாளை 23ஆம் தேதி நடக்கிறது. அதற்குள் கூட்டணியை இறுதி செய்து, கூட்டணி கட்சித் தலைவர்களை மேடையேற்ற, பாஜக முயற்சித்து வருகிறது.சென்னையில் முகாமிட்டுள்ள கோயல்நேற்று, சென்னை வந்த மத்திய அமைச்சர் பியுஷ் கோயலை சந்தித்து, தேசிய ஜனநாயக கூட்டணியில், அ.ம.மு.க. பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் இணைந்தார். கூட்டணி அறிவிப்புக்குப் பின், பியுஸ் கோயல் உள்ளிட்ட பாஜக தலைவர்களுடன், 30 நிமிடங்களுக்கு மேலாக அவர் ஆலோசனை நடத்தினார்.இபிஎஸ் இல்லத்தில் கோயல்இந்நிலையில், இன்று ஜனவரி 22ஆம் தேதி, காலை, சென்னையில் அதிமுக பொதுச்செயலாளர் இபிஎஸ்-ஐ சந்திக்க அவரது இல்லத்திற்கு பியுஷ் கோயல் வந்தார். பியுஸ் கோயல் மற்றும் பாஜ, தலைவர்களுக்கு அதிமுக பொதுச்செயலாளர் இபிஎஸ் இல்லத்தில் காலை விருந்து அளிக்கப்பட்டது. பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன், மத்திய இணை அமைச்சர் எல்.முருகன், வானதி சீனிவாசன், எச்.ராஜா, பொன்.ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோர் விருந்தில் கலந்து கொண்டனர். அப்போது, தொகிதி பங்கீடு தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது.விருந்துக்கு பின்னர் நிருபர்களிடம் பியுஷ் கோயல் கூறியதாவது: அதிமுக பொதுச்செயலாளர் இபிஎஸ் எனது நீண்ட கால நண்பர். அவரது வீட்டில் நான் காலை உணவு அருந்தினேன். பிரதமர் மோடி, அமித்ஷா, பாஜக தேசிய தலைவர் நிதின் நபின் ஆகியோர் இபிஎஸ்-க்கு வாழ்த்து தெரிவித்தனர். ஊழல் நிறைந்த திமுக ஆட்சியை மொத்தமாக வீழ்த்தி, தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சிக்கு வரும்.திமுக ஆட்சியில் ஊழலை தவிர வேறு ஏதும் நடக்கவில்லை என அனைத்து தரப்பு மக்களும் புரிந்து கொண்டனர். தமிழக மக்களின் நலனுக்காக திமுக அரசு எதுதும் செய்யவில்லை. நீதிமன்ற கண்டனத்திற்கு ஆளான துணை முதல்வர் உதயநிதியை பதவியில் இருந்து நீக்க வேண்டும். துணை முதல்வர் உதயநிதி பிளவுவாத அரசியல் செய்கிறார். இந்திய தேசத்திற்கு எதிரான கருத்தை உதயநிதி கூறி வருகிறார். இவ்வாறு பியுஷ் கோயல் கூறினார்.இதையும் பாருங்கள் - என்டிஏ கூட்டணியில் தேமுதிக?