வயநாடு நாடாளுமன்ற தொகுதி இடைத்தேர்தலில் பிரியங்கா காந்தி வெற்றி பெற்றதை எதிர்த்து, கேரள உயர்நீதிமன்றத்தில் பாஜகவை சேர்ந்த நவ்யா ஹரிதாஸ் மனு தாக்கல் செய்துள்ளார். பிரியங்கா காந்தி தாக்கல் செய்த தேர்தல் பிரமாண பத்திரத்தில் அவருடைய சொத்துகள் குறித்தும், குடும்பத்தின் சொத்துகள் குறித்தும் தவறான தகவல்களை வழங்கி உள்ளதாக அவர் குற்றம் சாட்டியுள்ளார்.