நாட்டில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை 2 முதல் 4 ரூபாய் வரை குறைய வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பெட்ரோல் பங்குகளின் டீலர் கமிஷனை உயர்த்தி ஹிந்துஸ்தான், பாரத் பெட்ரோலியம், இந்தியன் ஆயில் ஆகிய நிறுவனங்கள் அறிவிப்பு வெளியிட்டுள்ளன. இதனால் பெட்ரோல் விலை குறையக்கூடும் என பெட்ரோலிய துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.