இந்திய கிரிக்கெட் வீரர்கள் அனைவரும் அணி நிர்வாகம் ஏற்பாடு செய்துள்ள பயண விதிமுறைகளுக்கு உட்பட்டே பயணிக்க வேண்டும் உள்ளிட்ட புதிய கட்டுப்பாடுகளை பிசிசிஐ விதித்துள்ளது. மேலும் கிரிக்கெட் தொடருக்காக வெளிநாட்டிற்கு செல்லும் வீரர்கள் பிசிசிஐ-யின் முறையான அனுமதி பெற்றே குடும்பத்தாரை அழைத்து செல்ல வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.