மிகவும் எதிர்பார்க்கப்பட்ட போக்கோ எக்ஸ்7 ((POCO X7)) ஸ்மார்ட்போனின் விற்பனை பிளிப்கார்ட் தளத்தில் தொடங்கியுள்ளது. 3டி கர்வ்ட் டிஸ்பிளே, சோனி சென்சார் கேமரா, டைமன்சிட்டி 7300 அல்ட்ரா சிப்செட், 5500mAh பேட்டரி என பல அம்சங்களை கொண்ட போன், 2 ஆயிரம் ரூபாய் சலுகையுடன் 19 ஆயிரத்து 999 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.