ஜார்ஜியாவில் இயங்கி வந்த ரிசார்ட் ஒன்றில் கார்பன் மோனாக்சைடு வாயு கசிந்து ஏற்பட்ட விபத்தில் 11 இந்தியர்கள் உயிரிழந்ததாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. குடாவ்ரி (( Gudauri )) பகுதியிலுள்ள ரிசார்ட்டின் 2ஆவது தளத்தில் கார்பன் மோனாக்சைடு வாயு கசிந்ததால் அங்கு ஓய்வெடுக்கும் பகுதியில் இருந்த 12 பேரும் மூச்சுத்திணறி உயிரிழந்ததாக கூறப்படுகிறது.