தெலங்கானாவில் கலப்புத் திருமணம் செய்து கொண்ட பெண் காவலரை, அவரது அண்ணன் ஆணவக்கொலை செய்த சம்பவம் மாநிலத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ரங்கா ரெட்டி மாவட்டத்தை சேர்ந்த பெண் காவலர் நாகமணி, கடந்த 15 நாட்களுக்கு முன் பெற்றோர் எதிர்ப்பை மீறி கலப்பு திருமணம் செய்து கொண்டார். இதனால் ஆத்திரமடைந்த அவரது அண்ணன் பரமேஷ், நாகமணியை கழுத்தை அறுத்து கொலை செய்தார்.