தமிழக வெற்றி கழக தலைவர் விஜய், தனது முதல் மாநாட்டின் மூலம் அரசியல் மற்றும் கருத்தியல் ரீதியாக முதல் தோல்வியை சந்தித்திருப்பதாக, மனித நேய ஜனநாயக கட்சி தலைவர் தமிமுன் அன்சாரி விமர்சித்துள்ளார். இது தொடர்பாக அறிக்கை வெளியிட்டுள்ள அவர், அரசியலை பாம்புடன் ஒப்பிட்டு சிறுமைப்படுத்தும் வகையில் விஜய் பேசியது ஏற்க முடியவில்லை என கூறினார். மேலும், அரசியல் என்பது 3 மணி நேர திரைப்படம் அல்ல என்றும், மேடையில் நக்கலும், நையாண்டியுமாக விஜய் பேசியதை அவ்வளவு எளிதில் கடந்து போய் விட முடியாது எனவும் தமிமுன் அன்சாரி தெரிவித்துள்ளார்.