தமிழ்நாட்டின் பல்வேறு கல்லூரியில் மாணவ, மாணவிகள் மண் பானையில் பொங்கல் வைத்தும், புத்தாடை அணிந்தும், ஆட்டம் பாட்டத்துடன் உற்சாகமாக கொண்டாடி மகிழ்ந்தனர்.காளை முன்பு பொங்கலை வைத்து வழிபட்ட மாணவிகள்திருச்சி, திருவெறும்பூர் அருகே உள்ள பாவேந்தர் பாரதிதாசன் கல்லூரியில் மாணவிகள் பொங்கல் வைத்தும், பொங்கல் பானை முன்பு நிறுத்தி வழிபட்டும் சிறப்பாக கொண்டாடினர். இதனை தொடர்ந்து, மாணவ, மாணவிகள் பல்வேறு போட்டிகளில் பங்கேற்றும், நடனமாடியும் உற்சாகமடைந்தனர்.கயிறு இழுக்கும் போட்டியில் பங்கேற்று மகிழ்ந்த மாணவிகள்வேலூர் மாவட்டம், சாய்நாதபுரத்தில் உள்ள டிகேஎம் மகளிர் கல்லூரியில் பொங்கல் பண்டிகையை ஆடல், பாடலுடன் உற்காசமாக கொண்டாடினர். புத்தாடை அணிந்து மாணவிகள் நடனமாடியும், கயிறு இழுக்கும் போட்டியில் பங்கேற்றும் மகிழ்ந்தனர்.பாரம்பரிய உடையை அணிந்து வந்த வெளிநாட்டு மாணாக்கர்கள்திருப்பத்தூரில் உள்ள தூய நெஞ்சக் கல்லூரியில் ஆப்பிரிக்க நாட்டு மாணவ, மாணவிகள் தமிழ்நாட்டின் பாரம்பரிய முறைப்படி சேலை, வேட்டி அணிந்தும், பொங்கல் வைத்தும் உற்சாகமாக பொங்கல் பண்டிகையினை கொண்டாடினர். இதனை தொடர்ந்து, திரைப்பட பாடல்களுக்கு வெளிநாட்டு மாணவ,மாணவிகள் துள்ளலாட்டம் போட்டனர்.பாரதிதாசன் அரசு பெண்கள் கல்லூரியில் பொங்கல் விழா உற்சாகம்புதுச்சேரியில் உள்ள பாரதிதாசன் அரசு பெண்கள் கல்லூரியில் நடைபெற்ற பொங்கல் பண்டிகை கொண்டாட்டத்தில் , துணை நிலை ஆளுநர் கைலாஷ்நாதன் பங்கேற்றார். மாணவிகள் புத்தாடை அணிந்தும் பொங்கல் வைத்தும், பல்வேறு போட்டிகளில் பங்கேற்று உற்சாகம் அடைந்தனர்.பொங்கல் பானை முன்பு கும்மியடித்து குதூகல கொண்டாட்டம்ராமநாதபுரம் அரசு மகளிர் கல்லூரில் நடைபெற்ற சமத்துவ பொங்கல் விழாவில், மாணவிகள் பொங்கல் வைத்தும் கும்மியடித்து குதூகலமாக நடனமாடியும் உற்சாகம் அடைந்தனர்.பொங்கலோ பொங்கல் என முழக்கமிட்டு மாணவிகள் உற்சாகம்திருப்பூரில் உள்ள குமரன் மகளிர் கல்லூரியில், தமிழர் திருநாளான பொங்கல் விழாவினை மாணவிகள் உற்சாகமாக கொண்டாடினர். பொங்கல் வைத்தும் பொங்கலோ பொங்கல் என்று முழக்கமிட்டும், திரைப்பட பாடல்களுக்கு ஏற்றவாறு நடனமாடியும் தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.லேசான மழையில் நனைந்தபடி நடனமாடி உற்சாகம்சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூரில் உள்ள ஆறுமுகம் பிள்ளை சீதை அம்மாள் கல்லூரியில், லேசாக பெய்த மழையில் நனைந்தபடி மாணவ, மாணவிகள் பொங்கல் விழாவை உற்சாகமாக கொண்டாடினர். பொங்கல் வைத்தும், கூட்டமாக நடனமாடியும் குதூகலமடைந்தனர்.ஆட்டம் பாட்டத்துடன் மாணாக்கர்கள் உற்சாகம்காரைக்காலில் மதர் தெரேசா அரசு செவிலியர் கல்லூரியில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, அமைச்சர் திருமுருகன் மண் பானையில் பால் ஊற்றி பொங்கல் வைக்கும் நிகழ்வை துவக்கி வைத்தார்.பின்னர், மாணவ, மாணவிகள் பொங்கல் வைத்தும் ஆட்டம் பாட்டத்துடன் பொங்கல் விழாவினை உற்சாகமாக கொண்டாடி மகிழ்ந்தனர்.இதையும் பாருங்கள் - மண் பானையில் பொங்கல் வைத்த மாணவிகள்